வடக்கூர் பத்ரகாளியம்மன் கோவிலில் 1008 விளக்கு பூஜை
ADDED :1256 days ago
முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் வடக்கூர் பத்ரகாளியம்மன் கோயில் பொங்கல் மற்றும் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு கடந்த வாரம் காப்பு கட்டப்பட்டது. இந்நிலையில் தினந்தோறும் பத்ரகாளி அம்மனுக்கு சிறப்புபூஜைகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று சிறப்புபூஜையாக 1008 விளக்குபூஜை நடந்தது. பின்பு பத்ரகாளி அம்மனுக்கு பால்,பன்னீர், மஞ்சள்,சந்தனம் உட்பட 21 வகையான அபிஷேகம், தீபாரதனை நடந்தது. விளக்குபூஜைக்கான ஏற்பாடுகளை பேரூராட்சி துணைத்தலைவர் வயணப்பெருமாள் செய்தார்.விழாவில் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள மக்கள் பலரும் கலந்து கொண்டனர்.