குபேரனைப் போல வாழ ஆசையா...
ADDED :1285 days ago
செல்வத்திற்கு அதிபதியான குபேரன், தான் இழந்த செல்வங்களான சங்க, பதும நிதிகளை மீண்டும் பெற்ற நாள் ‘அட்சய திரிதியை’. பாண்டவர்கள் வனவாசத்தின் போது சூரியனிடம் இருந்து அள்ள அள்ளக் குறையாத அட்சய பாத்திரம் பெற்றது இந்த நாளில் தான். செல்வம் பெருகச் செய்யும் இந்த நன்னாளில் வழிபட வேண்டிய தெய்வமான அட்சய லிங்கேஸ்வரர் திருவாரூர் மாவட்டம் கீவளுரில் இருக்கிறார். இவரை தரிசித்தால் குபேரனைப் போல வாழும் யோகம் அமையும்.
சிவபூஜையைத் தொடங்கும் முன், முருகப்பெருமான் மஞ்சளில் விநாயகர் பிடித்து பிள்ளையார் பூஜை செய்தார். கீவளுரில் இருந்து சற்று துாரத்திலுள்ள ‘மஞ்சாடி’ என்னும் ஊரில் இந்த விநாயகருக்கு கோயில் உள்ளது.
செல்வது எப்படி
திருவாரூர் – நாகப்பட்டினம் செல்லும் வழியில் 15 கி.மீ.,