சகோதரர்களுக்கு கைகொடுங்கள்
                              ADDED :1278 days ago 
                            
                          
                           
* ஏழ்மையில் வாடும் சகோதரர்களுக்கு கைகொடுங்கள். 
* பிறருக்கு கொடுங்கள். உங்களுக்கும் கிடைக்கும். 
* ஏழைகளுக்கு உதவுங்கள். விண்ணகத்திற்கு செல்வீர்கள்.  
* உங்களது இரக்கச் செயல்கள் ஆண்டவர் முன் சென்றடைகின்றன.  
* நன்மை செய்யவும், பகிர்ந்து வாழவும் மறவாதீர்கள். 
* வெற்றி பெற நல்லவரின் ஆலோசனையை கேளுங்கள்.  
* முட்டாளின் பார்வைக்கு அவனது வழி சரியாகவே தோன்றும். 
* உண்மையை பேசினால் சுதந்திரமாக இருக்கலாம்.   
* பிறர் இல்லாதபோது அவரைப்பற்றி பேசாதீர்.  
* பிறருடன் சண்டையிட்டு உங்களின் மதிப்பை குறைத்துக் கொள்ளாதீர்.  
* பொய் பேசி சேர்க்கும் பொருள் காற்றாய் பறக்கும்.  
* சகிப்புத்தன்மை உள்ளவர்களிடம் மன அமைதி இருக்கும்.
– பொன்மொழிகள்