உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கமுதி குமரக்கடவுள் கோயில் வருடாபிஷேக விழா

கமுதி குமரக்கடவுள் கோயில் வருடாபிஷேக விழா

கமுதி: கமுதி அருகே கொடுமலூர் குமரக்கடவுள் கோயிலில் அபிராமம் பாதயாத்திரை குழு சார்பில் 34ம் ஆண்டு வருடாபிஷேக விழா நடந்தது.இதனையொட்டி அபிராமம் விநாயகர்,கஜபூஜை, துர்க்கை அம்மன் கோயிலில் பால், மஞ்சள் உட்பட 17 வகையான அபிஷேகம் நடந்தது.பின்பு கோயிலில் இருந்து 15 கி.மீ. தூரம் கொடுமலூர் குமரக்கடவுள் கோயிலுக்கு பக்தர்கள் பால்குடம்,அலகுவேல் குத்தி பாதயாத்திரையாக சென்றனர்.பின்பு சிவாச்சாரியார் நவநீதகிருஷ்ணன் குருக்கள் தலைமையில் முருகனுக்கு பால், தயிர், அரிசிமாவு, தினைமாவு, பன்னீர், பஞ்சாமிர்தம் உட்பட 33 வகையான அபிஷேகம், சிறப்புபூஜைகள் நடந்தது.பக்தர்கள் பஜனையில் ஈடுபட்டனர்.விழாவில் கமுதி,அபிராமம் அதனை சுற்றியுள்ள பக்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !