உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முதுகுளத்தூர் பத்ரகாளியம்மன் கோயில் பால்குடம் ஊர்வலம்

முதுகுளத்தூர் பத்ரகாளியம்மன் கோயில் பால்குடம் ஊர்வலம்

முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் வடக்கூரில் உள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் பொங்கல், முளைப்பாரி திருவிழா நடந்தது. இதனை முன்னிட்டு கடந்த ஏப்.26 தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இந்நிலையில் தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இன்று காமராஜர் பள்ளி அருகே உள்ள விநாயகர் கோயிலில் இருந்து பக்தர்கள் பால்குடம் ,அக்னிச்சட்டி எடுத்து முக்கிய வீதிகளில் ஊர்வலமாக பத்ரகாளியம்மன் கோயிலுக்கு சென்றனர். பின்பு அம்மனுக்கு பால் உட்பட 21 வகையான அபிஷேகம் நடந்தது. மாலை 5 மணிக்கு மேல் பக்தர்கள் முளைப்பாரி தூக்கி வடக்கூர், அரசு மருத்துவமனை தெரு உட்பட முக்கிய வீதிகளில் ஊர்வலமாக சென்றனர். சத்திரிய நாடார் உறவின்முறை சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் முதுகுளத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !