உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயிலில் ஹயக்ரீவர் யாகம்

தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயிலில் ஹயக்ரீவர் யாகம்

அலங்காநல்லூர் : பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்கள் வெற்றிபெற அலங்காநல்லூர் தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயிலில் உள்ள லட்சுமி ஹயக்ரீவருக்கு சிறப்பு யாகம் நடந்தது. முன்னதாக புனித நீர் குடங்களுக்கு தீபாராதனை, சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. வேத மந்திரங்கள் முழங்க யாக வேள்வியும், பூர்னாதி பூஜை வழிபாடு செய்தனர். பள்ளி, கல்லுரரி மற்றும் போட்டி தேர்வு எழுதும் மாணவர்கள் பங்கேற்றனர். சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் நடந்தது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகி சீனிவாசன் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !