உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காமாட்சி அம்மன் கோவில் விழா அலகு குத்தி பக்தர்கள் நேர்த்திகடன்

காமாட்சி அம்மன் கோவில் விழா அலகு குத்தி பக்தர்கள் நேர்த்திகடன்

சத்தியமங்கலம் வடக்குபேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீகாமாட்சி அம்மன் கோவிலில் பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திகடன் செலுத்தினர்.கடந்த ஏப் 27ல் பூச்சாட்டப்பட்டது.மே 5ந்தேதி தீர்த்தக்குடம் எடுத்து வந்தனர்.இன்று  அதிகாலை 3மணிக்கு அம்மன் அழைக்கப்பட்டது.அதை தொடர்ந்து அலங்கார பூஜை,விளக்கு மாவு எடுத்து வந்தனர். இரவு 7.30மணிக்கு பக்தர்கள் நேர்த்திகடன் செலுத்தும் விதமாக முதுகில் அலகு குத்தி தேர் இழுத்தனர். 30அடி நீளமுள்ள சங்கிலியை முதுகில் அலகு குத்தி இழுத்து சென்றனர். 25அடிநீளமுள்ள வேலை வாயில் குத்தினர். முதுகில் அலகு குத்தி அந்தரத்தில் தொங்கிய படி பறவை காவடி எடுத்தனர்.திருவிழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள் செய்யப்பட்டது. வெள்ளிகிழமை காலை உரிஅடித்தல், சந்தனகாப்பு அலங்காரம், திருவிளக்கு பூஜைநடக்கிறது. சனிக்கிழமை மஞ்சள் நீராட்டுவிழா நடைபெறுகிறது. மே12ந்தேதி மறுபூஜையுடன் முடிவடைகிறது. திருவிழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !