உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அவிநாசி மகா மாரியம்மன் கோவில் பூச்சாட்டு விழா

அவிநாசி மகா மாரியம்மன் கோவில் பூச்சாட்டு விழா

அவிநாசி: அவிநாசி கைகாட்டி புதுாரில் உள்ள மகா மாரியம்மன் கோவில் பூச்சாட்டு விழா நேற்று நடந்தது. கடந்த, 28ம் தேதி, பொட்டுச்சாமி பொங்கலுடன் விழா துவங்கியது. நேற்று காலை, 6:00 மணிக்கு, மாவிளக்கு எடுத்தல், 9:00 மணிக்கு, பொங்கல் வைத்தல், பகல், 12:00 மணிக்கு அலங்கார பூஜை நடந்தன. மாலை, 6:00 மணிக்கு கம்பம் நடுதல் நிகழ்ச்சி நடந்தது. இன்று, மஞ்சள் நீராட்டு விழா, அன்னதானத்துடன் விழா நிறைவு பெறுகிறது. அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !