உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சூரிய வழிபாட்டின் சிறப்பினை உணர்த்தும் கதைகள்

சூரிய வழிபாட்டின் சிறப்பினை உணர்த்தும் கதைகள்

ஆதித்ய ஹிருதய ஸ்தோத்திரம் சொல்லி ராமன் ராவணனை வெல்ல முடிந்தது. தேஜசை பெற விரும்புவர்கள் ஆதித்ய ஹிருதயம் சொல்ல வேண்டும்என பாகவதத்தில் சொல்லப்பட்டு உள்ளது. குந்தி தேவி கர்ணனை பெற்றதும் , ருரஜசா என்ற குரங்கினத்தவர் சுக்ரீவனை மகனாக பெற்றதும் சூரிய வழிபாட்டால் தான். சத்ரஜித்தர் சமந்தகமணி பெற்றது சூரியனை வழிபட்டுத்தான். தர்மர் அக்ஷய பாத்திரம் பெற்று அதிதிகளை உபசரித்தது சூரியனைத் துதித்துத்தான். ஸ்கந்த புராணத்தில் சூரிய வழிபாட்டால் வாழ்வில் வளமும் சந்தோஷமும் கிடைக்கும் என சொல்லப்பட்டு உள்ளது. சாம்ப புராணத்தில்ஜாம்பவதியின் மகன் சாம்பன் தொழுநோயிலிருந்து விடுபட்டது சூரியனை துதித்ததால்தான். மயூரபட் தனது  உடலை வைரத்திற்கு ஈடாக்கி நோயிலிருந்து விடுபட்டது சூரிய வழிப்பாட்டால்தான்.

 சனீஸ்வர மூர்த்தி ஈஸ்வரப் பட்டம் பெற்றவுடன், சர்வேஸ்வரனை வணங்கியவுடன், தமக்கு ஆசிகள் அளித்த பெற்றோர்களான சாயா தேவி சமேத சூர்ய மூர்த்தியைச் சாஷ்டங்கமாக வீழ்ந்து வணங்கிப் பூஜிக்கின்ற திதியே பானு சப்தமித் திதி. துரியோதனின் பத்னியாகிய பானுமதி, பானு சப்தமி விரதத்தைக் கடை பிடித்து, தனரேகையை அபூர்வமாகக் கையில் கொண்டிருந்த துரியோதனனுக்கு, லக்ஷ்மி கடாட்ச சக்திகளை மேம்படுத்தித் தந்தாள்.

சூரிய குலத்தைச் சேர்ந்த ஸ்ரீராமர், பானு சப்தமி நாட்களில் ஸ்ரீமன் சூரிய நாராயண விஷ்ணு ஸ்வாமிக்கான பூஜைகளைச் சூரிய மண்டலத்தில் விஸ்தாரமாக நடத்திப் பூஜிக்கின்றார். இவ்வாறு ஸ்ரீராமர் பானு சப்தமி நாட்களில், 108 சிவலிங்க மூர்த்திகளுக்கு பூஜைகளை நடத்தி ஸ்ரீமத்சூரிய நாராயண மூர்த்தியின் திருஅருளைப் பூவுலகிற்கு பெற்றுத் தருகிறார். ஸ்ரீராமர் பானு சப்தமி நாளில் சிவ பூஜை ஆற்றிய தலமே கும்பகோணம் அருகே உள்ள பாபநாசம் 108 சிவாலயம் ஆகும். இங்கு உள்ள சூரிய மூர்த்தி மிகவும் சக்தி வாய்ந்தவர். பானு சுதாகரர் என்ற நாமம் தாங்கி தினமும் 108 சிவலிங்க பூஜைகளை ஆற்றி, நவகிரகங்களுக்கு எல்லாம் அதிபதியான பேற்றைப் பெற்ற மூர்த்த வடிவுகளுள் ஒருவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !