மனமது செம்மையானால்...
ADDED :1269 days ago
தண்ணீர் என்றால் பள்ளத்தை நோக்கி பாயும். அதுபோல் மனம் என்றால் பழக்கத்திற்கு அடிமையாகும். நல்ல பழக்கம், கெட்ட பழக்கம் என்ற வேறுபாடெல்லாம் மனதிற்கு தெரியாது. உதாரணமாக நாள்தோறும் அதிகாலை நான்கு மணிக்கு அலாரம் வைத்து எழுந்து பாருங்கள். சில நாட்களுக்குப் பின் அலாரம் இல்லாமலே மனம் உங்களை நான்கு மணிக்கு எழுப்பி விடும். மனம் நல்ல பழக்கத்திற்கு அடிமையாகி விட்டது. இதுதான் மனதின் தன்மை.
எந்தவொரு தீய பழக்கமானாலும் அந்த எண்ணத்தை அழிக்க வேண்டும். அப்படி செய்தால்தான் அதிலிருந்து விடுபடுவது சாத்தியம். தொடக்கத்தில் இதற்கு முயற்சி தேவைப்படலாம். பிறகு பழகிவிடும்.
மனதில் தீய எண்ணம் இல்லையென்றால் அது மாபெரும் காந்தசக்தியை பெற்றுவிடும். பிறகு அது நல்லவைகளை மட்டும்தான் வசீகரிக்கும். இப்படி நீங்கள் இருந்தால் வாழ்வில் முன்னேறுவது உறுதி.