உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கற்பக விருட்ச வாகன காட்சி மண்டப கட்டளை கோலாகலம்

கற்பக விருட்ச வாகன காட்சி மண்டப கட்டளை கோலாகலம்

அவிநாசி: அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு, 28ம் ஆண்டு, ஸ்ரீகற்பக விருட்ச வாகன மண்டபக்கட்டளை பூஜைகள் நடந்தன. அவிநாசியில், ஸ்ரீகருணாம்பிகை உடனமர் அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், சித்திரை தேர்த்திருவிழா விமரிசையாக நடந்து வருகிறது. காலை, மாலை சிறப்பு வழிபாடுகளுடன், சுவாமி திருவீதியுலா சென்று, பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

தினமும், ஒவ்வொரு சமூகத்தினர், மண்டப கட்டளை வைத்து, சந்திரசேகரருக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜை நடத்தி, அன்னதானம் வழங்கி வருகின்றனர்.அவ்வகையில், ஸ்ரீகற்பக விருட்ச புறப்பாடு மண்டப அறக்கட்டளை மற்றும் வீர செங்குந்த முதலியார் சமூக கஞ்சியாளன்கூட்ட பங்காளிகள் சார்பில், 28 ம் ஆண்டு, ஸ்ரீகற்பக விருட்ச வாகன மண்டப அறக்கட்டளை விழா நேற்று நடந்தது.மங்கள வாத்தியம் முழங்க, அனந்தவல்லி அம்மையுடன் சந்திரசேகரர், கற்பக விருட்ச வாகனத்தில் எழுந்தருளினார். உற்வசமூர்த்திகளுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடந்தன.பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஸ்ரீகற்பக விருட்ச புறப்பாடு மண்டப கட்டளை நிர்வாகம் மற்றும் ஸ்ரீகருணாம்பிகா சேவா டிரஸ்ட் நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !