திருமலையில் பரிணய உற்சவம் : கருட வாகனத்தில் எழுந்தருளிய மலையப்பசுவாமி
ADDED :1349 days ago
திருப்பதி : கலியுகத்தின் துவக்கத்தில் திருமலை திருப்பதிக்கு வருவதற்கு முன் ஏழுமலையான், பத்மாவதி தாயாரை மணந்ததாக புராணங்கள் கூறுகின்றன. அதை நினை வுபடுத்தும் விதமாக, திருமலையில் ஆண்டுதோறும் பத்மாவதி பரிணய உற்சவம் நடத்தப்படுகிறது. இதற்காக நேற்று கருட வாகனத்தில் மலையப்பசுவாமி எழுந்தருளி அருள்பாலித்தார். கல்யாண மண்டபத்தில் ஊஞ்சல் சேவையில் தம்பதி சமேதராய் உற்சவ மூர்த்திகள் அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.