உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விஸ்வநாதரின் திருவிளையாடல்

விஸ்வநாதரின் திருவிளையாடல்


துளசிதாசர் அவதி மொழியில் ராமாயணத்தை எழுதினார். அதற்கு ‘ராம சரித மானஸ்’ எனப் பெயரிட்டிருந்தார். நுாலை அரங்கேற்றம் செய்ய காசியிலுள்ள பண்டிதர்களின் உதவியை நாடினார். வடமொழியில் எழுதாமல் பேச்சுவழக்கிலுள்ள அவதி மொழியில் எழுதியதைக் காரணம் காட்டி அரங்கேற்றம் செய்ய மறுத்தனர்.
அதன்பின் விஸ்வநாதர் கோயில் பணிபுரியும் பண்டாக்களிடம் ராமாயணச் சுவடியைக் கொடுத்து, “ காசி விஸ்வநாதர் முன்னிலையில் சுவடிகளை ஒப்படைக்கிறேன். தெய்வ சம்மதம் கிடைத்தால் ராமாயணம் அரங்கேறட்டும். இல்லாவிட்டால் முயற்சியை கைவிடுகிறேன்” என்றார் துளசிதாசர்.
அன்றிரவு விஸ்வநாதரின் முன் சுவடிகள் வைக்கப்பட்டு நடை சாத்தப்பட்டது. மறுநாள் திறந்தபோது அரங்கேற்றத்திற்கு சம்மதம் தெரிவிக்கும் விதமாக சுவடி மீது ‘சத்தியம் சிவம் சுந்தரம்’ என எழுதப்பட்டிருந்தது. இதை அறிந்த அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !