உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் கோவில் தேரோட்டம் கோலாகலம்

சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் கோவில் தேரோட்டம் கோலாகலம்

கடலுார் : சிங்கிரிகுடி லட்சுமிநரசிம்மர் கோவில் தேரோட்டம் நேற்று நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.கடலுார் அடுத்த சிங்கிரிகுடியில் பிரசித்திப் பெற்ற லட்சுமிநரசிம்மர் கோவில் அமைந்துள்ளது. இங்கு பிரம்மோற்சவ விழா, கடந்த 7ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. பிரம்மோற்சவத்தின் முக்கிய விழாவான

தேர்த் திருவிழா நேற்று காலை நடந்தது. லட்சுமிநரசிம்மருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து, தேருக்கு சிறப்பு பூஜைகள் செய்து, தேரோட்டம் துவங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.விழா ஏற்பாடுகளை, கோவில் செயல் அலுவலர் ரமேஷ் பாபு, தலைமை அர்ச்சகர் ஜெயக்குமார் பட்டாச்சாரியார் செய்திருந்தனர். கொரோனா பரவல் காரணமாக, கடந்த 2 ஆண்டுகளாக தேர்த் திருவிழா நடக்கவில்லை. 2 ஆண்டுகளுக்கு பின் தேரோட்டம் நேற்று நடந்தது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !