லட்சுமி நரசிம்மர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
ADDED :1468 days ago
திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் அடுத்த அந்திலி லட்சுமி நரசிம்மர் கோவிலில் நரசிம்ம ஜெயந்தியை முன்னிட்டு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.திருக்கோவிலுார் அடுத்த அந்திலி லட்சுமி நரசிம்மர் கோவிலில் நரசிம்ம ஜெயந்தியை முன்னிட்டு நேற்று முன்தினம் ஹோமம், அபிஷேகம், அலங்காரம், மூலவர் லட்சுமி நரசிம்மருக்கு மகா தீபாராதனை நடந்தது.விழாவின் இரண்டாம் நாளான நேற்று காலை 9:00 மணிக்கு மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு மகா திருமஞ்சனம், அலங்காரம், வேத மந்திரங்கள் முழங்க ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீநிவாசப் பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். மாலை 6:00 மணிக்கு அர்ச்சனை, தீபாராதனை நடந்தது.பக்தர்களுக்கு பிரசாதம் வினியோகிக்கப்பட்டது.