திகம்பரர் எனப்படுபவர் யார்?
ADDED :1246 days ago
ஆடையின்றி இருப்பவர்கள் திகம்பரர்கள். வானத்தை ஆடையாக உடுத்தவர்கள் என்று குறிப்பிடுவர். மகாவீரர் உள்ளிட்ட சமண மத துறவிகள் திகம்பரராக இருந்தனர். முற்றும் துறந்தநிலையை அடைந்த இவர்கள் அன்பே வடிவமாக இருப்பர். இவர்களில் வெள்ளை ஆடையை மட்டும் உடுத்தும் துறவிகளுக்கு ஸ்வேதம்பரர் என்று பெயர்.