இதுவே வெற்றிக்கான ரகசியம்
சொல்கிறார் ராமகிருஷ்ணர்
* கடவுளின் அருள் இருந்தால்தான் உன்னால் எதிலும் வெற்றி பெற முடியும்.
* பசுவைத் தேடும் கன்று போல கடவுளை தேடுவதில் ஆர்வமாக இரு.
* கடவுளை ஆராய்ச்சி செய்யாதே. நம்பிக்கையுடன் அவர் திருவடியில் சரணடைந்து விடு.
* கடவுளிடம் முறையிடு. உன்னுடைய பாவம் தீரும்.
* கடவுளை வெளியில் தேடுவது அறியாமை.
* கடவுளுக்கு வேண்டியவர், வேண்டாதவர் என யாரும் இல்லை.
* பெண்கள் அனைவருமே அன்னை பராசக்தியின் அம்சம்.
* மனதில் பக்தி இல்லாமல் யாத்திரை செல்வதில் அர்த்தம் இல்லை.
* அமைதியாக இருப்பதே ஞானத்தின் முதல் அடையாளம்.
* எல்லா ஞானிகளின் உபதேசமும் ஒரே கருத்தைத்தான் உணர்த்தும்.
* அன்புக்கும், அறிவுக்கும் சமபங்கு அளிப்பவரின் மனம் சமநிலையில் இருக்கும்.
* பொய் இருக்குமிடத்தில் எல்லா தீமைகளும் இருக்கும்.
* நல்லவர்களுடன் பழகு. உன் மனம் செம்மை பெறும்.
* விடாமுயற்சி உள்ளவனுக்கு உலகில் எல்லாம் சாத்தியமாகும்.
* உன்னுடைய உயர்வுக்கும் தாழ்வுக்கும் மனம்தான் காரணம்.
* விவேகம் இல்லாதவனை அறிஞன் என்று சொல்லக் கூடாது.
* ஒரு விஷயத்தை கேட்பதை விட, அதை காண்பது சிறப்பு.