உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / எல்லை பிரச்னைக்கு தீர்வு

எல்லை பிரச்னைக்கு தீர்வு


தொட்டி ஒன்றில் பல தடுப்புகளை ஏற்படுத்தி, மீன்களை தனித்தனியே வளர்த்து வந்தார் ஒருவர். இதனால் அந்த மீன்கள்,  ‘என்னடா.. இந்த மனுஷன் இப்படி இருக்கிறாரே.. கடலில் ஜாலியாக விளையாடிய நம்மை, இப்படி தனித்தனியாக அடைத்து வைத்திருக்கிறாரே’ என வருத்தப்பட்டது. அச்சமயம் மழை பெய்ததால், தடுப்புக்கு மேலே நீர் வர, மீன்கள் ஒன்றாக சேர்ந்து விளையாடின.
பல நாடுகளில் இந்த எல்லைப் பிரச்னைதான் பெரிதாக உள்ளது. இதனால் யாருக்கும் எவ்வித லாபமும் இல்லை. வேண்டுமானால் நிலப்பரப்பரப்பு கூடும். ஆனால் ஒற்றுமை?
இந்த பிரச்னைக்கு ஒரே தீர்வு விட்டுக்கொடுப்பதுதான். இது எல்லை பிரச்னைக்கு மட்டுமல்ல... எல்லா பிரச்னைக்கும்...


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !