உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நத்தம் அசோக் நகர் பகவதி அம்மன் மின் ரத பவனி

நத்தம் அசோக் நகர் பகவதி அம்மன் மின் ரத பவனி

நத்தம், நத்தம் அசோக்நகர் பகவதியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு அம்மன் மின் ரத பவனி நடந்தது. இதையட்டி சந்தன கருப்பசாமி கோவிலில் இருந்து கரந்தமலை கன்னிமார் தீர்த்தம் மேளதாளம் முழங்க கோவிலுக்கு அழைத்து வரப்பட்டது. தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேக ஆராதனை,திருவிளக்கு பூஜை, அன்னதானம் நடந்தது. பக்தர்கள் அக்கினிச்சட்டி , பால்குடம், சந்தன குடம், முளைப்பாரி எடுத்து வந்து நேர்த்தி கடன்களை செலுத்தினர். நேற்றிரவு முளைப்பாரி ஊர்வலத்தை தொடர்ந்து மின் ரதத்தில் பகவதி அம்மன் நகர வலம்வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !