ராமகிருஷ்ண மடத்தில் பலஹாரிணி காளி பூஜை
ADDED :1331 days ago
தாஞ்சாவூர் : தாஞ்சாவூர் ராமகிருஷ்ண மடத்தில் பலஹாரிணி காளி பூஜை நாளை 29ம் தேதி நடைபெறுகிறது. பகவான் ராமகிருஷ்ணர் தமது சக்திகள் அனைத்தையும் ரிணி காளி பூஜையன்று அன்னை சாரதாதேவியிடம் ஒப்படைத்தார். அன்று அன்னை சாரதாதேவியை ேஷாடஷி தேவியாகப் பூஜித்து ஜகத்ஜனனியாக மலர்வித்தார். நாளை இந்நாளை முன்னிட்டு, மடத்தில் பகவானுக்கும், பகவதிக்கும் சிறப்பு பூஜை, பஜனை மற்றும் உபன்யாசம் நாளை (29ம் தேதி) நடைபெற உள்ளது.
நேரம் : மாலை 6.15 முதல் 8.15 வரை அனைவரும் பங்கேற்கலாம் என சுவாமி விமூர்த்தானந்தர் தெரிவித்துள்ளார்.