உனக்கென தனிப்பாதையை உருவாக்கு
வழிகாட்டுகிறார் விவேகானந்தர்
* உனக்கென தனிப்பாதையை உருவாக்கினால் வெற்றி உனக்கே.
* மன அமைதி வேண்டுமா... யாருடைய குறையையும் காணாதே.
* நீண்ட துாரம் ஓடிவந்தால் தான் அதிக உயரம் தாண்டமுடியும்.
* உன் மனதை தினமும் சுத்தப்படுத்து.
* பிறர் முதுகுக்குப் பின்னால் நீ செய்ய வேண்டியது தட்டிக்கொடுப்பது மட்டும்தான்.
* எதை நினைக்கிறாயோ அதுவாகவே நீ மாறுவாய்.
* நீ செய்யும் செயலை வைத்துத்தான் எதிர்காலம் தீர்மானிக்கப்படுகிறது.
* அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்தும் முன் யோசி.
* உனக்கென ஒரு லட்சியத்தை தேர்ந்தெடு. அதை அடைய முயற்சி செய்.
* தீமையிலிருந்தும் பாடங்களை மனிதன் கற்றுக் கொள்கிறான்.
* உண்மைக்காக எதையும் துறக்கலாம். ஆனால் எதற்காகவும் உண்மையைத் துறக்காதே.
* ஒரு நேரத்தில் ஒரு செயலை செய். அதையும் முழுமையாக செய்.
* உனக்கு தேவையான வலிமை உன்னிடமே உள்ளன.
* உடலையும், மனதையும் நல்லபடியாக வைத்துக்கொள்.