உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நடப்பதெல்லாம் நன்மைக்கே

நடப்பதெல்லாம் நன்மைக்கே


சொல்கிறார் ஷீரடி சாய்பாபா

* காலதாமதம் ஏற்படுகிறதா? கவலைப்படாதே! நடப்பதெல்லாம் நன்மைக்கே.
* நல்ல மனம் கொண்டவரின் வீட்டில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.
* பிறர் மதிக்க வேண்டும் என்பதற்காக பக்தியில் ஈடுபடாதே.
* நம்பிக்கை, பொறுமையுடன் இரு. உனது வேண்டுதல் ஒருநாள் நிறைவேறும்.
* மனிதர்களுக்குள் ஏற்றத்தாழ்வு இருக்க காரணம் அவரவர் செய்த பாவ, புண்ணியங்களே.
* உண்மை எது என்பதை கண்டறிந்து செயல்படுவதே விவேகம்.   
* பிறருக்கு சேவை செய்வதே உண்மையான வாழ்க்கையாகும்.
* ஆணவத்தை கைவிட்டு ஆர்வமுடன் பணியில் ஈடுபடுங்கள்.
* கடவுள் ஒருவரே இந்த உலகில் நடக்கும் அனைத்தையும் அறிந்தவர்.  
* பிறர் துன்பம் கண்டு மகிழ்வது பாவம். பிறர் இன்பம் கண்டு மகிழ்வது புண்ணியம்.    
* மனித பிறவி மகத்தானது. அதை உணர்ந்து பயனுள்ள பணிகளில் ஈடுபடு.
* உன்னை காப்பாற்றும் சக்தி கடவுளிடம் மட்டும்தான் உள்ளது.
* நீ எங்கு இருந்தாலும், எதைச் செய்தாலும் கடவுளின் பார்வையில் இருந்து தப்ப முடியாது.
* பிறருக்கு உதவுங்கள். நெருக்கடியான நேரத்தில் உங்களுக்கும் உதவி கிடைக்கும்.
* கடவுளை தேடி அலையாதே. எல்லா உயிர்களிடத்திலும் அவர் உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !