உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உன்னைப் போல் ஒருவன்

உன்னைப் போல் ஒருவன்


இயேசு சொன்ன ஒரு வாக்கியம் சிந்திக்கத்தக்கது.
“ நீங்கள் மற்றவர்களுக்கு அளக்கும் அளவுப்படியே உங்களுக்கும் அளக்கப்படும்.
இதன் பொருள்: ஒருவருக்கு  தீமை செய்தால், அதே தீமை நம்மை விரைவில் சேரும். மற்றவருக்கு புத்தி சொல்லிவிட்டு, கடைபிடிக்காதவர்கள் நீதி சொல்லும் தகுதியற்றவர்கள். தன் குழந்தைகளின்  அருகில் அமர்ந்து புகைப்பவர், ‘புகை பிடிக்காதே’ என்று புத்தி சொல்லிப் பயனில்லை. ஏனெனில் பெற்றோரின் பழக்கத்தையே பிள்ளைகளும் பின்பற்றுவர். குழந்தைகள் முன்னிலையில் கணவனும்,  மனைவியும் சண்டையிட்டுக் கொண்டு, “உன் சகோதர சகோதரிகளிடம் சண்டையிடாதே” என்று சொன்னால் பயன் ஏற்படாது. மேலும் இளம் பருவத்தில் பார்த்த விஷயங்களையே மனிதர்கள்  வருங்காலத்தில் பின்பற்றுவர்.  
எனவே  முதலில் நாம் திருந்துவோம். பின்னர் மற்றவரை திருத்துவோம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !