விருதுநகர் வெயிலுகந்தம்மன் கோயிலில் வைகாசி பொங்கல் விழா துவக்கம்
ADDED :1550 days ago
விருதுநகர், : விருதுநகர் வெயிலுகந்தம்மன் கோயிலில் பிரசித்தி பெற்ற வைகாசி பொங்கலை முன்னிட்டு நேற்று கொடியேற்றப்பட்டது.நேற்று அம்மனின் வாகனமான சிங்க கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும், யாகசாலை பூஜைகளும் நடத்தப்பட்டன. பக்தர்கள் தங்கள் விரதத்தை துவங்கினர். ஜூன் 7ல் பொங்கல், 8ல் கயிறுகுத்து, அக்கினி சட்டி நடக்கிறது. ஏற்பாடுகளை விருதுநகர் ஹிந்து நாடார் தேவஸ்தான நிர்வாகிகள் செய்தனர்.