மாகாளியம்மன் கோவிலில் அக்னி சட்டி எடுத்து, அலகு குத்தி பக்தர்கள் வேண்டுதல்
ADDED :1271 days ago
வெள்ளகோவில்: வெள்ளகோவில் மாகாளியம்மன் 100 வந்து ஆண்டு பூச்சாட்டு, அக்னி சட்டி எடுத்து அலகு குத்தி, குண்டம் இறங்கும் திருவிழா நடந்தது.
காலை வீரக்குமார் கோவில் வளாகத்தில் உள்ள தெப்பக்குளத்தில் இருந்து பூ வளர்க்கப்பட்டு 200க்கும் மேற்பட்டோர் அக்னிச்சட்டி எடுத்து முக்கிய வீதி கடைவீதி வழியாக மாரியம்மன் கோவிலை வந்த பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர். இதேபோன்று அலகு குத்தியும் பறவைக் காவடி விமான காவடி எடுத்தும் தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர். கோவை - திருச்சி சாலையில் அக்னிசட்டி எடுத்து வந்தபோது கூட்டம் அதிகமானதால் போக்குவரத்து அரை மணி நேரம் ஸ்தம்பித்தது. மாலை 6 மணிக்கு மேல் அக்னி குண்டம் இறங்க ஆரம்பித்தனர்.