கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில் வைகாசி திருவிழா கொடியேற்றம்
நாகர்கோவில்,: கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் வைகாசி திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடிப்பட்டம் வெள்ளிப்பல்லக்கில் வைத்து பஞ்ச வாத்யத்துடன் கோயிலை மூன்று முறை வலம் வந்த பின்னர் சிறப்பு பூஜைகள் நடந்தன. காலை 9:30 மணிக்கு மாத்துார் மடம் தந்திரி சங்கர நாராயணரரு கொடியேற்றி தீபாராதனை நடத்தினார், இதில் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ., உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஜூன் 12 வரை 10 நாட்கள் நடக்கும் விழாவில் தினமும் காலையிலும், மாலையிலும் தேவி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது. ஜூன் 11 காலை 7:00 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. ஜூன் 12 இரவு 11:00 மணிக்கு கன்னியாகுமரி கடல் முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு நடக்கிறது. கொடியேற்றத்துக்கான கயிற்றை கன்னியாகுமரி கையிலியார் மீனவ குடும்பத்தை சேர்ந்த மீனவர்கள் பரம்பரையாக வழங்கி வருகின்றனர்.