உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நொடியில் வந்த மயில் வீரன்

நொடியில் வந்த மயில் வீரன்


முருகன் மீது திருப்புகழ் பாடிய அருணகிரிநாதர் மீது புலவர் சம்பந்தாண்டன் பொறாமை கொண்டார். திருவண்ணாமலையை ஆண்டு வந்த பிரபுடதேவன் என்னும் மன்னரின் முன்னிலையில் இருவரில்  சிறந்தவர் யார் என்பதற்கான போட்டி நடந்தது. பக்தியால் முருகப்பெருமானை வரவழைக்க முயன்றார் அருணகிரிநாதர். ஆனால் மந்திரங்களை ஜபித்து  தடுக்க புலவர் முயற்சித்தார். அவரது சூழ்ச்சி  நிறைவேறவில்லை. முருகப்பெருமான் திருவண்ணாமலை கோயிலின் ஆயிரங்கால் மண்டபத்தில் காட்சி தந்தார். கம்பத்தில் காட்சி தந்ததால் ‘கம்பத்து இளையனார்’  என முருகன் பெயர் பெற்றார்.  இந்த நிகழ்வை “அருணையில் ஒரு நொடிதனில் வரும் மயில்வீரா” எனப் பாடியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !