நினைத்ததை நினைத்தபடியே அடைய...
ADDED :1235 days ago
உலகத்தில் ஒரு மனிதனுக்கு மிகவும் அற்புதமான நேரம், அவன் தனிமையில் இருக்கும் நேரம்தான். அப்படி இருக்கும் போதுதான் ஒருவன் தன் மனதை ஊடுருவிப் பார்க்க முடியும். அதனால் நமக்கு என்ன பயன் என்று பலரும் நினைக்கலாம். அதில் பெரிய உண்மையும் பொதிந்துள்ளது. யாருடைய மனம் அமைதியாக இருக்கிறதோ.. அங்கே ஒரு தேடுதல் ஆரம்பிக்கிறது. தேடுதல் ஆரம்பமானால் எதிர்காலம் பற்றிய யோசனை கிடைக்கும். யோசனை கிடைத்தவுடன் அதை செயல்படுத்தலாம். பிறகு என்ன.. நீங்கள் நினைத்ததை நினைத்தபடியே அடையலாம்.
‘ஆண்டவர் திருமுகத்தை உன் பக்கம் திருப்பி அமைதி அருள்வாராக’ என்கிறது பைபிள்.