திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மொட்டையரசு விழா
ADDED :1227 days ago
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாக திருவிழாவின் நிறைவு நிகழ்ச்சியான மொட்டையரசு திருவிழா நடந்தது. கோயிலில் சுவாமிகளுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கிய விசாகத் திருவிழாவில் தினமும் 30 நிமிடங்கள் வசந்த உற்ஸவமும், நேற்று பால்குட உற்ஸவம் நடந்தது. மொட்டையரசு திருவிழா: இன்று காலை உற்ஸவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு அபிஷேகம், தீபாராதனைகள் முடிந்து தங்க குதிரை வாகனத்தில் தியாகராஜர் பொறியியல் கல்லூரி வளாகத்திலுள்ள மொட்டையரசு. திடலில் எழுந்தருளினர். பக்தர்களின் திருக்கண் மண்டபங்களில் அருள்பாலித்து பூப்பல்லக்கில் சுவாமி கோயில் சென்றடைந்தார்.