உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வைகாசி விசாகம் : மேட்டுப்பாளையம் முருகருக்கு சிறப்பு அபிஷேகம்

வைகாசி விசாகம் : மேட்டுப்பாளையம் முருகருக்கு சிறப்பு அபிஷேகம்

மேட்டுப்பாளையம்: வைகாசி விசாகத்தை முன்னிட்டு, பாலமுருகருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள, சக்தி விநாயகர் கோவிலில், பாலமுருகன் சன்னதி உள்ளது. வைகாசி விசாகத்தை முன்னிட்டு பாலமுருகருக்கு அபிஷேக, அலங்கார பூஜைகள் செய்யப்பட்டன. முருகர் சுவாமிக்கு, பால், தயிர், மஞ்சள், திருமஞ்சனம், பன்னீர், தேன், இளநீர், பஞ்சாமிர்தம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து அலங்காரம் செய்து, பக்தர்கள் வழிபாட்டிற்கு விடப்பட்டது. ராஜ அலங்காரத்தில் பாலமுருகர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, முருகனை வணங்கி சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !