திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் : பக்தர்கள் பரவசம்
ADDED :1273 days ago
திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் பவுர்ணமி தோறும், லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை தரிசித்து, 14 கி.மீ., கிரிவலம் செல்வர். அதன்படி, நேற்று இரவு, 8:17 மணி முதல், இன்று மாலை, 5:53 மணி வரை பவுர்ணமி உள்ளதால் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்று தரிசனம் செய்து வருகின்றனர். நேற்று வைகாசி மாத பௌர்ணமி முழுநிலவு வெளிச்சத்தில் ஜொலிக்கும் அருணாசலேஸ்வரர் கோவில் கிளி கோபுர கீழ் உள்ள தீப தரிசன மண்டபத்தில் இருக்கும் நந்தி பகவானை ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.