சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் கருடசேவை உற்சவம்
ADDED :1273 days ago
செஞ்சி: செஞ்சி அடுத்த சிங்கவரம் கிராமத்தில் உள்ள ரங்கநாதர் கோவிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு 47 ஆம் ஆண்டு கருடசேவை உற்சவம் நடந்தது. அதை முன்னிட்டு அன்று காலை ஆறு மணிக்கு ரங்கநாயகி சமேத ரங்கநாதருக்கு சிறப்பு திருமஞ்சனம், மகா அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து ரங்கநாதர் கருட வாகனத்தில் சிங்கவரம் கிராமத்தில் மாட வீதிகளில் வீதி உலாவும், அன்று மாலை செஞ்சி காந்தி கடைவீதியில் வீதி உலாவும் நLந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை செஞ்சி வாணிய வைசியர் சமூகத்தினர் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.