உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் வசந்த உற்சவ தீர்த்தவாரி

பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் வசந்த உற்சவ தீர்த்தவாரி

பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயில் வைகாசி வசந்த உற்சவ விழாவில் தீர்த்தவாரி உற்சவம் நடந்தது. இக் கோயிலில் வசந்த உற்சவ விழாவையொட்டி நேற்று முன்தினம் பெருமாள் குதிரை வாகனத்தில் வீதியுலா வந்தார். தொடர்ந்து ஐந்தாம் நாளான நேற்று காலை 9:00 மணிக்கு பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் தீர்த்தவாரி மண்டபத்தில் எழுந்தருளினார். பின்னர் அங்கு தீர்த்தவாரி உற்சவம் நடந்தது. தொடர்ந்து ரத வீதிகளில் வலம் வந்தார். கோயிலை அடைந்த பெருமாளுக்கு சிறப்பு தீபாராதனைக்கள் காண்பிக்கப்பட்டது. பிரசாதங்கள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !