உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்தணி முருகன் கோவிலில் இன்று ஆடி கிருத்திகை துவக்கம்

திருத்தணி முருகன் கோவிலில் இன்று ஆடி கிருத்திகை துவக்கம்

திருத்தணி : முருகன் கோவிலில், ஆடிக் கிருத்திகை திருவிழா இன்று துவங்குகிறது. திருத்தணி முருகன் கோவிலில், ஆடிக் கிருத்திகை மற்றும் மூன்று நாள் தெப்பம் என, ஐந்து நாட்கள் திருவிழா நடக்கிறது. இதில், தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் காவடிகள் எடுத்து வந்து மூலவரை தரிசிப்பர். இந்தாண்டிற்கான விழா நாளை ஆடி அஸ்வினியுடன் துவங்குகிறது. வரும், 9ம் தேதி ஆடி பரணி, 10ம் தேதி ஆடிக் கிருத்திகை நடக்கிறது. அன்றிரவு முதல் நாள் தெப்பத் திருவிழா துவங்குகிறது. மூன்று நாள் நடைபெறும் தெப்பத் திருவிழாவில் உற்சவ பெருமான் வள்ளி,தெய்வானை உடன் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி, திருக்குளத்தை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். விழாவிற்கான ஏற்பாடுகளை இணை ஆணையர் (பொறுப்பு) கவிதா, கோவில் தக்கர், ஜெயசங்கர் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !