உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திரவுபதியம்மன் கோவிலில் தர்மர் பட்டாபிஷேகம்

திரவுபதியம்மன் கோவிலில் தர்மர் பட்டாபிஷேகம்

திருக்கனுார்: செட்டிப்பட்டு திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி உற்சவத்தையொட்டி, தர்மர் பட்டாபிஷேகம் நேற்று நடந்தது. திருக்கனுார் அடுத்த செட்டிப்பட்டு கிராமத்தில் திரவுபதியம்மன், செல்வ முத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், தீமிதி உற்சவம் கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.இதையொட்டி, தினமும் காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், இரவு சுவாமி வீதியுலா நடந்தது.கடந்த 14ம் தேதி தீமிதி உற்சவம் நடந்தது. உற்சவம் நிறைவாக, தர்மர் பட்டாபிஷேகம் நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.விழாவை முன்னிட்டு, நாடகப்பள்ளி சிறுவர், சிறுமிகளின் நடன நிகழ்ச்சி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !