லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் மண்டல பூஜை நிறைவு
ADDED :1238 days ago
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அடுத்த ரங்கம்பாளையம் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் மண்டல பூஜை சிறப்பாக நடைபெற்று வந்தது. மண்டல பூஜை நிறைவு நாளில் மகா சுதர்சன ஹோமம், லட்சுமி நரசிம்மர் ஹோமம் உள்ளிட்டவை நடைபெற்றது. இதை ரங்கப்ரியன், வெங்கடேஷ் பிரசாத், முத்துகிருஷ்ண ஐயங்கார் உள்ளிட்டோர் நடத்தி வைத்தனர். சிறப்பு அலங்காரத்தில் லட்சுமி நரசிம்மர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.