உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிதம்பரம் நடராஜர் கோவிலில் திருவாசகம் பாட வந்த மக்கள் அதிகாரம் அமைப்பினர்

சிதம்பரம் நடராஜர் கோவிலில் திருவாசகம் பாட வந்த மக்கள் அதிகாரம் அமைப்பினர்

சிதம்பரம்: உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீது ஏறி திருவாசகம், பாட இந்து அறநிலையத் துறையினர் அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்தனர். அதனைத் தொடர்ந்து மக்கள் அதிகாரத்தை சேர்ந்தவர்கள் தேவாரம் திருவாசகம் பாட கோவிலுக்கு வந்தனர். இதன் காரணமாக சிதம்பரம் டிஎஸ்பி, ரமேஷ் ராஜ் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 11.30 மணி அளவில், சிவ பக்தர்கள் மற்றும் மக்கள் அதிகாரம் நிர்வாகிகள் சுமார் 20க்கும் மேற்பட்டோர் நடராஜர் கோயிலின் கனகசபை மீது ஏறி, சிவ பக்தர்கள் தேவாரம் திருவாசகம் பாடினர். ராவணன், ஏழுமலை, அம்சா ராணி, மக்கள் அதிகாரம் அமைப்பினர் மணியரசன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர் . அப்போது கோட்டாட்சியர் ரவி, சிதம்பரம் தாசில்தார் ஹரிதாஸ், மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !