உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாரியூர் பூவேந்திய நாதர் கோயிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை விழா

மாரியூர் பூவேந்திய நாதர் கோயிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை விழா

சாயல்குடி: சாயல்குடி அருகே மாரியூர் பூவேந்திய நாதர் சமேத பவளநிற வல்லியம்மன் கோயில் காலபைரவர் தனி சன்னதியாக வீற்றிருக்கிறார். நேற்று மாலை 4 மணி அளவில் யாகசாலை பூஜை நடந்தது. கால பைரவருக்கு 11 வகையான சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நிறைவேற்றப்பட்டது. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான நிர்வாகத்தினர், மகா சபை பிரதோஷ அன்னதான கமிட்டியினர் செய்திருந்தனர். *உத்தரகோசமங்கை மங்கள நாதர் சன்னதி முன்புறம் உள்ள ஷேத்திர கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. வெற்றிலை மாலை சாற்றபட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !