வெற்றி வேண்டுமா...
என கேட்கிறார் சாணக்கியர்
* வெற்றி வேண்டுமா.. பயத்தை துாக்கி எறி.
* ஒவ்வொரு நட்புக்கு பின்னாலும் சுயநலம் இருக்கும். இந்த உண்மை கசக்கும்.
* குறிக்கோள் ஒன்றை எடுத்துக்கொள். அதை அடையும்வரை ஓயாதே.
* உனது செயல்களை வைத்துத்தான் உன் கவுரவம் உயரும்.
* நீ எவ்வளவு பலவீனம் உள்ளவனவனாக இருந்தாலும் அதை பிறரிடம் சொல்லாதே.
* காற்று வீசும் திசையில் மலரின் வாசனை செல்லும். ஆனால் நீ செய்யும் தர்மமோ எல்லா திசையிலும் செல்லும்.
* உனது ரகசியத்தை வெளிப்படுத்தாதே. மீறினால் சுதந்திரத்தை இழப்பாய்.
* யாரிடமும் வீண்வாதம் செய்யாதே.
* கல்வி கற்பதிலும், தர்மம் செய்வதிலும் ஒருநாளும் திருப்தி அடையாதே.
* தண்ணீர் இருக்கும் இடத்தில் பறவை இருப்பதுபோல, ஆதாயம் உள்ள இடத்தில் உறவினர்கள் இருப்பார்கள்.
* ஒரு செயலில் இறங்கும்முன், உனக்கு என்ன கிடைக்கும் என்பதை யோசி.
* உழைப்பால் வரும் பணமே மகிழ்ச்சி தரும்.
* ஒருவர் செய்த உதவியை ஒருபோதும் மறந்துவிடாதே.
* புதிய விஷயத்தை கற்றுக்கொள்ள கூச்சப்படாதே.
* நல்லவர்களுடன் பழகு. உன் வாழ்வு பிரகாசமாகும்.
* முயற்சி இருந்தால் முட்டாள்கூட அறிஞனாகலாம்.