வானரங்களைப் பிடித்து வனத்தில் விடனும் : பக்தர்கள் கோரிக்கை
ADDED :1239 days ago
மதுரை மீனாட்சி அம்மனின் உப கோயிலான திருவாதவூரில் பாண்டிய மன்னரால் கட்டப்பட்ட திருமறைநாதர் கோயில் உள்ளது. இக் கோயிலில் சனீஸ்வரர் தனியாக இருப்பதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் சாமி கும்பிட வந்து செல்கின்றனர். தற்போது இக் கோயிலில் வானரங்கள் (குரங்குகள்) தொல்லை அதிகமாக உள்ளதால் கோயிலுக்கு சாமி கும்பிடுவதற்கு பக்தர்கள் கொண்டு வரும் தேங்காய், பழங்களை பறிக்கிறது. தர மறுக்கும் பக்தர்களை உர்ர்.. என்ற சத்தமிட்டு மிரட்டுவதுடன் கடிக்கிறது. அதனால் குழந்தைகளுடன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் பயத்துடனே வந்து செல்கின்றனர். அதனால் அறநிலையத்துறை அதிகாரிகள் வனத்துறை மூலம் வானரங்களை பிடித்து வனத்தில் விட ஏற்பாடு செய்ய வேண்டும் என பக்தர்கள் விரும்புகின்றனர்.