மாணிக்கவாசகர் குருபூஜை விழா
ADDED :1236 days ago
வாடிப்பட்டி: குட்லாடம்பட்டி சிறுமலை அடிவாரம் சுவாமி ரமணகிரி ஆசிரமத்தில் மாணிக்கவாசகர் குருபூஜை விழா நடந்தது. சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. மதுரை மண்டல பயிற்சி இணை இயக்குனர் நிர்வாக அலுவலர் (பொறுப்பு) பாலமுரளி தலைமையில் நடந்த திருவாசகம் ஒப்புவித்தல் போட்டியில் சிறியவர் முதல் பெரியவர் வரை பங்கேற்றனர். திருவிளக்கு பூஜை நடந்தது நிகழ்ச்சிகளை சுவாமி ரமண பிரசாதனந்தகிரி ஒருங்கிணைத்தார். குட்லாடம்பட்டி அண்ணாமலையார் கோயிலில் மாணிக்கவாசகருக்கு சிறப்பு பூஜைகளை கோயில் நிறுவனர் கோபிநாத் செய்தார்.