பாடலாத்ரி நரசிங்க பெருமாள் கோவிலில் கருட சேவை
ADDED :1224 days ago
மறைமலை நகர்: சிங்கப்பெருமாள் கோவிலில் உள்ள பாடலாத்ரி நரசிங்க பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும், பெரியாழ்வார் பிறந்த நட்சத்திரமான ஆனி மாதம் சுவாதி நட்சத்திரம்
அன்று, கருடசேவை விமரிசையாக நடைபெறும். ஆனி மாத சுவாதி நட்சத்திரமான நேற்று, உற்சவர் பிரகலாதவரதர் கருட வாகனத்தில் எழுந்தருளி, நான்கு மாட வீதிகளிலும் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.