ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் அன்னதானத் திட்டத்திற்கு நன்கொடை
ADDED :1311 days ago
ஸ்ரீ காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் நடக்கும் அன்னதானத் திட்டத்திற்காக பெங்களூரைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் குடும்பத்தினர் இன்று 2 லட்சம் ரூபாய்க்கான (காசோலையை) நன்கொடையாக கோயில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு .தாரக சீனிவாசலுவிடம் வழங்கினர். முன்னதாக இவர்களுக்கு அதிகாரிகள் சிறப்பு தரிசன ஏற்பாடுகளை கோயில் சார்பில் செய்ததைத் தொடர்ந்து கோயிலுக்குள் சென்றவர்கள் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரையும் ஞானபிரசுனாம்பிகை தாயாரையும் சாமி தரிசனம் செய்தவர்களுக்கு கோயில் வளாகத்தில் உள்ள தக்ஷிணாமூர்த்தி சன்னதி அருகில் பொன்னாடை போர்த்தி கௌரவித்ததோடு கோயில் தீர்த்த பிரசாதங்களையும் சாமி படத்தையும் வழங்கினர்.