உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அருணாசலேஸ்வரர் கோவிலில் முதல்வரின் மகள் சுவாமி தரிசனம்

அருணாசலேஸ்வரர் கோவிலில் முதல்வரின் மகள் சுவாமி தரிசனம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், முதல்வர் ஸ்டாலின் மகள் செந்தாமரை, நேற்று சுவாமி தரிசனம் செய்தார். ஆனி மாத பவுர்ணமி தினமான நேற்று, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், முதல்வர் ஸ்டாலின் மகள் செந்தாமரை வருகை தந்தார். அப்போது அவர், விநாயகர் சன்னதி, அருணாசலேஸ்வரர் மற்றும் உண்ணாமுலையம்மன் சன்னதிகளில் சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் சிவாச்சாரியார்கள் சிறப்பு அர்ச்சனை செய்தனர். பின், பிரசாதங்கள் வழங்கி கவுரவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !