எரியோடு கோயில்களில் விழா
ADDED :1199 days ago
எரியோடு: எரியோடு ச.புதூரில் முனியப்பசுவாமி கோயில் வருடாபிஷேக விழா நடந்தது. விநாயகர் வழிபாடுடன் துவங்கி மகாசங்கல்பம், வருண வழிபாடு, பழம், நெய், மூலிகை, பால், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பல வகை பொருட்களை கொண்டு யாகவேள்வி பூஜை நடந்தது. நிறைவாக சிறப்பு அபிஷேகம், அன்னதானம் நடந்தது. ஏற்பாட்டினை ச.புதுார் இளைஞர்கள், பொதுமக்கள் செய்திருந்தனர்.
* மணியகாரன்பட்டியில் பாப்பம்மன் மாலை கோயிலில் மண்டல பூஜை நடந்தது. யாக பூஜைகளை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாட்டினை கோயில் தலைவர் சவடமுத்து, செயலாளர் ராஜூ, பொருளாளர் சுப்பிரமணி, திருஅருள் பேரவை செயலாளர் பழனிச்சாமி செய்திருந்தனர்.