வித்யா கணபதி கோயில் மஹா கும்பாபிஷேகம்
ADDED :1290 days ago
சிவகாசி: சிவகாசி எஸ்.எப்.ஆர்., மகளிர் கல்லுாரியில் அமைந்துள்ள வித்யா கணபதி கோயில் மஹா கும்பாபிஷேகம் நடந்தது. முதல் நாள் மங்கள வாத்திய இசையோடு விநாயகர் பூஜை, புண்யா ஹவாசநம், விநாயகர் பஞ்ஜாசன பஞ்ஜாவர்ண பூஜை, நவக்கிரக பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடந்தது. சுவாமிக்கு தீபாரதனை கட்டப்பட்டது. மாலையில் முதல் கால யாக பூஜைகள், யஜுர் வேத பாராயணங்கள் மகாபூர்ணாஹுதி நடந்தது. நேற்று காலை இரண்டாம் கால யாக பூஜைகள் நடந்தது. தொடர்ந்து கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டது. சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜை நடந்தது. கல்லுாரி முதல்வர் பழனீஸ்வரி, பேராசிரியர்கள், அலுவலர்கள் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.