உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் மண்டல பூஜை நிறைவு

ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் மண்டல பூஜை நிறைவு

திருப்பரங்குன்றம்: மதுரை ஹார்விபட்டி பஜனை கூடத்தில் உற்சவர்கள் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீனிவாச பெருமாள் பிரதிஷ்டை செய்து 48 வது நாள் மண்டல பூஜை நேற்று நிறைவடைந்தது. யாக பூஜைகள் முடிந்து புனித நீர் மூலம் உற்சவர்களுக்கு அபிஷேகம் நடந்து அலங்காரமாகி தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிர்வாகிகள் பூஜை ஏற்பாடுகள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !