ஐயனாரப்பன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
ADDED :1262 days ago
அரியாங்குப்பம் : தவளக்குப்பம் அடுத்த பூரணாங்குப்பம் ஒலக்கூர் ஐயனாரப்பன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.அதையொட்டி, பெரியாண்டவர், வெற்றிவிநாயகர், பாலமுருகர், முனீஸ்வரன், கன்னிமார்கள், அகோர வீரபத்திரன் உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.நேற்று முன்தினம் இரவு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. தொடர்ந்து, சுவாமி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.