பொன்னியம்மன் கோவிலில் 108 பால்குட ஊர்வலம்
ADDED :1510 days ago
காஞ்சிபுரம்: வேடல் பொன்னியம்மன் கோவிலில் ஆடித்திருவிழாவையொட்டி நேற்று, 108 பால்குட ஊர்வலம் நடந்தது.
காஞ்சிபுரம் அடுத்த காலுார் ஊராட்சிக்கு உட்பட்ட வேடல் கிராமத்தில், பொன்னியம்மன் கோவிலில், ஆடி முதல் செவ்வாய் கிழமையான நேற்று ஆடித்திருவிழா நடந்தது. இதில், 108 பெண்கள் பால்குடம் ஏந்தி ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து சிம்ம வாகனத்தில் அம்மன் அருள்பாலித்தார். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 6:00 மணிக்கு ஊஞ்சல் சேவை உற்சவம் நடந்தது. விழாவில், வேடல் மற்றும் சுற்றியுள்ள பல்வேறு கிராம மக்கள் பங்கேற்றனர்.