உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேளச்சேரி முத்துமாரியம்மன் கோவிலில் தீமிதி விழா : பக்தர்கள் பரவசம்

வேளச்சேரி முத்துமாரியம்மன் கோவிலில் தீமிதி விழா : பக்தர்கள் பரவசம்

வேளச்சேரி, வேளச்சேரி, முத்துமாரியம்மன் கோவிலில், 25வது தீமிதி விழாவில், பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு வேண்டுதலை நிறைவேற்றினர்.வேளச்சேரி, சசி நகரில் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின், 25ம் ஆண்டு தீமிதி திருவிழா நடந்தது. இதையொட்டி, மூன்று நாட்களாக, கங்கையம்மன்கோவிலில் இருந்து பால்குடம் எடுத்துவருதல், பால் அபிஷேகம், அம்மனுக்கு காப்புகட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.மேலும், பதிவிளக்கு, அம்மன் கரகம் திருவீதி உலா, கூழ்வார்த்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நேற்று முன்தினம், தீமிதி விழா நடந்தது.இதில், பெண்கள், ஆண்கள் பக்தியுடன் தீ மிதித்தனர். சில ஆண்கள், குழந்தைகளை சுமந்து கொண்டு தீ மிதித்து வேண்டுதலை நிறைவேற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !